பிரித்தானியாவில் பெரும் அச்சுறுத்தலாகியுள்ள கோவிட் தொற்று! - பொது மக்களுக்கு எச்சரிக்கை
பிரித்தானியாவில் கோவிட் பரவல் எண்ணிக்கை மீண்டும் வேகமெடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 26,068 பேருக்கு கோவிட் தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 29ம் திகதிக்கு பின்னர் பதிவாகியுள்ள அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும். ஜனவரி 29ம் திகதி பிரித்தானியாவில் 29,079 பேருக்கு கோவிட் தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதனிடையயே இன்றைய தினம் கோவிட் தொற்றினால் 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 4,800,907 பேர் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், 128,140 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 347,891 பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 283 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் இதுவரை கோவிட் வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 4,324,876 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.
இதேவேளை, இன்றைய புள்ளிவிவரங்களுக்கு அமைய மேலும் 137,991 பேருக்கு கோவிட் தடுப்பூசியின் முதல் அளவு செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 150,688 பேருக்கு இரண்டாவது அளவு செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் மொத்தம் 44,719,762 பேருக்கு கோவிட் தடுபபூசியின் முதல் அளவு செலுத்தப்பட்டுள்ளதாகவும், 32,872,450 பேர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பிரித்தானியாவில் கோவிட் தொற்றின் இந்திய மாறுபாடான டெல்டா திரிபு வேகமாக பரவி வரும் நிலையில், மக்கள் அது குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.