ஓட்டமாவடியில் 15 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
நாட்டில் பயணத்தடை அமுலிலுள்ள நிலையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கோவிட் சட்டத்தினை மீறி பயணம் செய்ய 118 பேருக்கு இன்று மேலெழுவாரியாக மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மூலம் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்துள்ளார்.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கோவிட் தொற்றாளர்கள் இணங்காணப்பட்ட நிலையிலும், நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்ட நிலையிலும், மேலெழுவாரியாக ஓட்டமாவடி பிரதேசத்தில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்ட நிலையில் கோவிட் சட்டத்தினை மதிக்காது மற்றும் முகக்கசவம் அணியாது வீதிகளில் பயணம் செய்தோர்களுக்கு மேலெழுவாரியாக அன்டிஜன் பரிசோதனை பெறப்பட்டது.
குறித்த அன்டிஜன் பரிசோதனையில் மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதர் ஏ.எல்.நௌபர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாட்டில் கோவிட் வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலை பரவியுள்ள நிலையிலும், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிலும் அதிகரித்து காணப்படும் நிலையில் பொதுமக்கள் விழிப்புடன் இருந்து பிரதேசத்தினை பாதுகாத்துக் கொள்ளுமாறு சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.










வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

இந்திய சினிமாவில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் முதல் படம் ராமாயணா.. அடேங்கப்பா இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
