திருமணமான புது தம்பதியினர் உள்ளிட்ட பலருக்கு கோவிட் தொற்று!
மாதம்பே - கல்முருவ பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் கலந்துகொண்ட 23 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்டவர்களில் திருமணமான தம்பதியினரும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட பெண் ஒருவருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதனையடுத்து திருமண நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 23 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திருமண நிகழ்வு கடந்த 28ம் திகதி இடம்பெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இறக்குவானை பகுதியில் இடம்பெற்ற பிறந்தநாள் நிகழ்வில் கலந்துகொண்ட 15 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இறக்குவானை பொது சுகாதார ஆய்வாளர் சுனேத் முனவீர இதனை தெரிவித்தார். இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,
“கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட பிறந்தநாள் நிகழ்வில் கலந்துகொண்ட இறக்குவானையில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் உரிமையாளரும் சமீபத்தில் கோவிட் நிமோனியாவால் உயிரிழந்துள்ளதாக” கூறியுள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
