கோவிட் தொற்று தீவிரமடையலாம்! யாழ்ப்பாணம் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Jaffna COVID-19 Kanapathipillai Mahesan
By Murali Apr 22, 2021 09:33 PM GMT
Report

கோவிட் தொற்று தீவிரம் அடையலாம் என எதிர்பார்க்க படுவதால், பொதுமக்ளை விழிப்பாக செயற்படுமாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிட்ட அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

யாழ் மாவட்டத்தில் தற்போதைய கோவிட்  நிலைமை கடந்த வாரம் சற்று அதிகரித்து நிலைமை காணப்பட்ட போதிலும் இந்த வாரம் சற்று குறைவடைந்து காணப்படுகின்றது.

நேற்று மாலை கிடைத்த பிசிஆர் பரிசோதனை அடிப்படையில் 14 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் 1,155 பேருக்கு கடந்த அக்டோபர் மாதத்திற்குப் பின்னர் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் 639 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். 17 இறப்புக்கள் பதிவாகியுள்ளன. இந்நிலைமையில் யாழில் 1,547 குடும்பங்களைச் சேர்ந்த 4,417 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

தொடர்ச்சியாக பி.சி.ஆர் பரிசோதனைகள் மக்கள் கூடும் இடங்களிலும் வர்த்தக நிலையங்களை அண்டிய பகுதிகளிலும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. இது எழுமாறாக இடம்பெற்று வருகின்ற ஒரு செயற்பாடாக இருக்கின்றது.

கடந்த வாரமளவில் திருநெல்வேலியில் முடக்கப்பட்ட இந்த கிராமத்தில் ஒரு பகுதியினை தவிர்ந்த ஏனைய பகுதியினை விடுவித்திருந்தோம். மேலும் பாரதி புரம் என்னும் கிராமம் நாளை காலையில் இருந்து விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர்கள் எடுத்திருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

அங்கு நேற்று 97 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் மூன்று நபர்களுக்கு மாத்திரமே தொற்று உறுதிப்படுத்தப்பபட்டுள்ளது. ஏனையோருக்கு தொற்றில்லை.

அந்த நிலைமை திருப்தியாக உள்ளதன் காரணமாக திருநெல்வேலி பாரதிபுரம் கிராமம் நாளைய தினம் கண்காணிப்பு வலயத்தில் இருந்து விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவித்தொகை உணவுப் பொதிகள் வழங்கி வருகின்றோம், 4,823 குடும்பங்களுக்கு 50.49 மில்லியன் ரூபா அதற்கென செலவிடப்பட்டுள்ளது.

மேலும் யாழ் மாவட்டத்தில் தனியார் மற்றும் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் திட்டமிட்டபடி ஆரம்பித்து இடம்பெற்று வருகின்றது.

அதற்குரிய சுகாதார வழிகாட்டல்களை சுகாதார மற்றும் கல்வி அமைச்சு இணைந்து மேற்கொண்டுருக்கின்றன. அதன் அடிப்படையில் அதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு கல்வி செயற்பாடுகள் வழமைபோல் முன்னெடுக்கப்படுகின்றன.

தொற்றுநிலைமை சற்று தீவிரம் அடையலாம் என எதிர்பார்க்க படுவதன் காரணமாக பொதுமக்கள் சற்று விழிப்பாக செயற்பட வேண்டும் குறிப்பாக நகரப்பகுதி மற்றும் மக்கள் ஒன்று கூடும் இடங்கள் பொது மக்கள் அவதானமாக தங்களுடைய செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

அநாவசிய நடமாட்டங்களை தவிர்த்து தேவையானவற்றுக்கு மாத்திரம் வருகை தரலாம், அவ்வாறு வரும்போது முககவசம் அணிதல் சமூக இடைவெளி போன்றவற்றை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

அதே நேரத்தில் யாழ் நகரப்பகுதியில் இராணுவத்தினரால் தொட்டு நீக்கி திரவம் விசிறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.

சுகாதாரப் பகுதியினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து கோவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்தில் கோவிட் நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

அந்த வகையில் யாழ்ப்பாண மாவட்டத்தினை ஒரு தொற்றில்லாத பாதுகாப்பான நிலையில் வைத்திருப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கின்றோம். தொடர்ச்சியான விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்,

அந்த விழிப்புணர்வுகளை செவி மடுத்து பொதுமக்கள் ஒழுகுவது முக்கியமானது. அதாவது எதிர்வரும் காலப்பகுதியில் தொற்று நிலைமை தீவிரமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது,

சுகாதார அமைச்சு மற்றும் கோவிட் கட்டுப்பாட்டு மத்திய நிலையம் இதனை தெரிவித்திருக்கின்றது,   எனவே அவற்றுக்குத் தக்கவாறு சில முன்னேற்பாடுகளை நாங்கள் மேற்கொள்ள வேண்டும், அந்த வகையிலே பொது மக்களுடைய ஒத்துழைப்பு மிக அவசியமானது.

அதேநேரத்தில் சில கூட்டங்கள் ஏற்பாடுகளை செய்யும் போது அதற்குரிய நடைமுறைகளை அனுமதி பெற்று சுகாதாரப் பகுதியினர் ஆலோசனைகளை பெற்று செயற்படுதல் மிக அவசியமாகும் என தெரிவித்துள்ளார்.    

நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US