யாழில் கைதி ஒருவருக்குக் கோவிட் ! - 7 பேர் கட்டாய தனிமைப்படுத்தலில்
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்குக் கோவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஒரே சிறைக்கூடத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் 8 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவர்களில் ஒருவருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருடன் சிறைக்கூடத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 7 கைதிகளும் கட்டாயத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தொற்றுக்குள்ளான கைதி மானிப்பாய் - சங்குவேலியைச் சேர்ந்தவர் எனவும், இவர் கடந்த 11ஆம் திகதி செய்யப்பட்டிருந்தார் எனவும், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.