கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய கோவிட் தொற்றாளர்
கோவிட் தொற்று இல்லை என்ற எதிர்மறையான PCR அறிக்கையுடன் வெளிநாடு செல்வதற்காக சென்ற நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுகாதார பிரிவினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் குருணாகல் பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய இளைஞர் ஒருவர் எயார் அரபு விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் டுபாய் செல்வதற்காக விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
பிரபல வைத்தியசாலையில் பீசீஆர் அறிக்கை பெற்றிருந்த இந்த நபரின் அறிக்கைகளை விமான நிலையத்தின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் பரிசோதனை செய்துள்ளனர்.
அதிகாரிகள் சோதனையிடும் வரை தான் கோவிட் தொற்றாளர் என அறிந்திருக்கவில்லை என குறித்த நபர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நபருக்கு கோவிட் பரிசோதனை செய்த வைத்தியசாலை அதிகாரிகளிடம் வினவிய போது தங்களுக்கு அவ்வாறான ஒன்று தெரியாதென குறிப்பிட்டுள்ளனர்.
வைத்தியசாலை இவ்வாறு பொறுப்பற்ற முறையில் செயற்படுவதனால் குறித்த நபரிடம் இருந்து பல தொற்றாளர்கள் உருவாகுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதென அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
விமான நிலைய சுகாதார பிரிவு அவதானிக்காமல் இருந்திருந்தால் இந்த நபர் விமானத்தில் பயணித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
