தனியார் நிதி நிறுவனத்தில் நால்வருக்கு தொற்று உறுதி
வவுனியா முதலாம் குருக்குத்தெருவில் பிரபல தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு அண்மையில் அமைந்துள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் நான்கு ஊழியர்களுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதினையடுத்து குறித்த நிறுவனம் சுகாதார பிரிவினரினால் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபட்டுள்ளது.
இந்த நிதி நிறுவனத்தில் பணியாற்றும் ஒர் ஊழியருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டதினையடுத்து ஏனைய ஊழியர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது குறித்த நிறுவனத்தில் பணியாற்றும் நான்கு ஊழியர்களுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன். குறித்த தனியார் நிதி நிறுவனம் 14 நாட்கள் சுகாதார பிரிவினரினரினால் தனிமைப்படுத்தப்பட்டது.
மற்றும் அங்கு பணியாற்றிய ஏனைய ஊழியர்களும் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நிதி நிறுவனத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் சுயதனிமைப்படுத்தலை மீறி இன்றைய தினம் (18.05) கடமைக்கு சென்றமையடுத்து சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்ததுடன், அவரை உடனடியான வீட்டில் சுயதனிமைப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.






இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
