இலங்கையில் இன்று பதிவாகிய கோவிட் தொற்றாளர்களின் மொத்த நிலவரம்
கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 691 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்று அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,945ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 164,187 ஆக உயர்வடைந்துள்ளது.
முதலாம் இணைப்பு
இலங்கையில் மேலும் 2,254 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கோவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 163,496 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,612 பேர் இன்று (23) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கோவிட் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 128,607 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் இவர்களில் 1,178 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
மீண்டும் போரைத் தொடங்க ட்ரம்ப் தயங்க மாட்டார்... ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஜேடி வேன்ஸ் News Lankasri