வவுனியா வைத்தியசாலையில் கோவிட் தொற்று நீக்கும் செயற்பாடு
வவுனியாவில் கோவிட் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், வவுனியா வைத்தியசாலையில் தொற்று நீக்கும் செயற்பாடு இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா வைத்தியசாலையில் கிசிக்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் பி.சி.ஆர் பரிசோதனையில் பலர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டு வருகின்றனர்.
எனவே வைத்தியசாலையில் கோவிட் நோயாளர்களுக்கான சிகிச்சை விடுதிகளும் அமைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், வவுனியா நகரசபை தவிசாளரின் ஆலோசனைக்கமைய நகரசபை பொது முகாமைத்துவ
உதவியாளர் துரைராஜா சபேசன் தலைமையில் வவுனியா வைத்தியசாலையின் நோயாளர்
விடுதிகள், வெளி நோயாளர் பகுதி, பார்வையிடுவோர் அமரும் பகுதி, வைத்தியசாலை
வளாகம், வைத்தியசாலையைச் சுற்றியுள்ள பிரதான வீதி பகுதி என்பவற்றில் தொற்று
நீக்கும் மருந்துகள் விசிறப்பட்டுத் தொற்று நீக்கும் செயற்பாடு
முன்னெடுக்கப்பட்டுள்ளது.



