மன்னார் மாவட்டத்தில் புதிதாக கோவிட் மரணம் ஒன்று பதிவு
மன்னார் மாவட்டத்தில் கோவிட் மரணம் ஒன்று பதிவாகியுள்ள நிலையில் மாவட்டத்தில் தற்போது வரை 25 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் (R.Vinodhan) தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கீரி பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய பெண் ஒருவர் நேற்றைய தினம் (9) மாலை கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த வயோதிப பெண் கோவிட் தடுப்பூசி எதையும் பெற்றுக் கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் தற்போது வரை 25 கோவிட் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. நேற்றய தினம் மேலும் 6 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் தற்போது வரை 2553 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.



