அதிகரிக்கும் கோவிட் தொற்றும் மரணங்களும் - இலங்கையில் மீண்டும் ஆபத்து
இலங்கையில் கோவிட் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையில் மீண்டும் ஏற்படும் அதிகரிப்பை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று சுகாதார துறை எச்சரித்துள்ளது,
தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 700ஐ தாண்டியது. நேற்று 716 புதிய கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இந்த வாரத்தில் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையில் தெளிவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குடும்ப மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக வீட்டில் சிகிச்சை பெறும் கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் வைத்தியர் மல்காந்தி கல்ஹேன தெரிவித்துள்ளார்.
மேலும் தினசரி கோவிட் தொற்று காரணமாக ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஐ தாண்டியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று கோவிட் தொற்று காரணமாக 22 மரணங்கள் ஏற்பட்டுள்ளதுடன், அதற்கு முதல் நாளில் 23 மரணங்களும் ஏற்பட்டுள்ளன.
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri