சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள கோவிட் தரவுகள்! - ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு
நாளாந்த கோவிட் இறப்புகள் மற்றும் வழக்குகள் தொடர்பான தகவல்கள் குறித்த சர்ச்சைக்கு தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனை கூறியுள்ளார். கோவிட் -19 இறப்புகள் மற்றும் நோய்த்தொற்றுகள் தொடர்பாக வெளியிடப்பட்ட தரவுகளின் துல்லியத்தன்மை குறித்து பல பிரிவினர் கவலைகளை எழுப்பியுள்ளனர்.
கோவிட் தொாடர்பான தகவல்களை மறைக்க வேண்
டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் கோவிட் தரவை மாற்ற முயற்சிக்கும் நபர்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
பொதுமக்கள் உயிருக்கு போராடும் நேரத்தில் யாரோ ஒருவர் வேண்டுமென்றே கோவிட் தொடர்பான தரவுகளை மாற்றியிருந்தால் அதை ஏற்க முடியாது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட தரவுகளில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், அது உடனடியாக சரிசெய்யப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
