மோட்டார்சைக்கிள் விபத்தில் உயிரிழந்தவருக்கு கோவிட் தொற்று உறுதி(Photos)
வவுனியா - மரக்காரம்பளை வீதியில் நேற்று காலை மூன்று மோட்டார்சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் காயமடைந்திருந்தனர்.
இவ்விபத்தில் பண்டாரிக்குளம், அம்மன் கோவில் வீதியினைச் சேர்ந்த 32 வயதுடைய சிறிரஞ்சன் என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த இளைஞருடன் தொடர்புகளைப் பேணியவர்களில் எவருக்காவது கோவிட் தொற்றுக்கான
அறிகுறிகள் காணப்படின் உடனடியாக அப்பகுதி சுகாதார பரிசோதகரைத் தொடர்பு
கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.






