நெட்டாங்கண்டல் ஆதார மருத்துவமனை ஊழியர் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதி
முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நெட்டாங்கண்டல் ஆதார மருத்துவமனையில் பணியாற்றும் தாதிய உத்தியோகத்தர் ஒருவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து சக பணியாளர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த 30.07.021 அன்று நெட்டாங்கண்டல் ஆதார மருத்துவமனையில் பணியாற்றும் பாண்டியன் குளம் செல்வபுரத்தினை சேர்ந்த தாதிய உத்தியோகத்தர் ஒருவர் சிகிச்சைக்கா யாழ்.போதனா மருத்துவமனைக்கு சென்றுள்ள நிலையில், அங்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் போது அவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவர் பணியாற்றிய நெட்டாங்கண்டல் ஆதார மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர் அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
