தலைமன்னாரில் 12 மாணவர்கள் உட்பட 15 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
தலைமன்னார் துறை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் 12 மாணவர்கள் உட்பட 15 பேருக்கு இன்றைய தினம்(1) மாலை வரை கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தலைமன்னார் வைத்தியசாலையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளடங்கலாக 50 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது தலைமன்னார் துறை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் 12 பேருக்கும் பெற்றோர்கள் 3 பேர் உள்ளடங்கலாக 15 பேருக்கு கோவிட் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர் ஒருவருக்கு தலைமன்னார் வைத்தியசாலையில் ஏற்கனவே தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் குறித்த மாணவருடன் தொடர்புடைய மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே பாடசாலை மாணவர்கள் உள்ளடங்கலாக 15 பேருக்குத் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த மாணவர்களுடன் தொடர்புடைய மாணவர்களை வீடுகளில் தனிமைப்படுத்த
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 4 மணி நேரம் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
