வவுனியாவில் 30 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
வவுனியாவில் 30 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகள் நேற்று இரவு வெளியாகின.
அதில், தவசிகுளம் பகுதியில் பத்து பேருக்கும், நெடுங்கேணி பகுதியில் ஒருவருக்கும், பூந்தோட்டம் பகுதியில் இருவருக்கும், பெரியார்குளம் பகுதியில் இருவருக்கும், திருநாவற்குளம் பகுதியில் மூவருக்கும், கற்குளம் பகுதியில் ஒருவருக்கும், சிதம்பரம் பகுதியில் ஒருவருக்கும், ஆச்சிபுரம் பகுதியில் இருவருக்கும், மாமடு பகுதியில் மூன்று பேருக்கும், அலகல்ல பகுதியில் ஒருவருக்கும், பெரியஉளுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், இறம்பைக்குளம் பகுதியில் ஒருவருக்கும், பொலிஸார் இருவருக்கும் என 30 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.





போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri
