இலங்கையில் பிரபல கலைஞர்கள் சிலருக்கு கோவிட் தொற்று உறுதி
இலங்கையில் திறமையான பிரபல கலைஞர்கள் சிலருக்கு கோவிட் -19 தொற்று உறுதியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரபல திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நாடாக இயக்குநர் சுதத் ரோஹன, ஜிப்ஸீஸ் இணைக்குழுவின் தலைவரும் பாடகருமான சுனில் பெரேரா, பிரபல நடிக, நடிகர்களான ஸ்ரீயானி அமரசேன, நிரோஷன் விஜேசிங்க, கிரிராஜ் கௌசல்ய, ரஞ்சன் ராமநாயக்க, ஜயசேகர அபோன்சு, ஷாலனி தாரகா, நயனதரா விக்ரமாராச்சி, ரொஷான ஹொன்டச்சு ஆகியோர் இவர்களில் அடங்குகின்றனர்.
இதனைத் தவிர விருது பெற்ற சிங்கள எழுத்தாளரான மகிந்த பிரசாத் மஷ் இம்புலவுக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
கோவிட் தொற்றியுள்ள கலைஞர்களில் நடிகை ஸ்ரீயானி அமரசேன, நடிகர் ஜயசேகர அபோன்சு, இசைக் கலைஞர் சுனில் பெரேரா ஆகியோர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.