இந்தியாவில் 2 கோடியை கடந்தது கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை - இப்படிக்கு உலகம்
இந்தியாவில் கோவிட் வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2 கோடியை கடந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை 4.01 இலட்சம், நேற்று முன் தினம் 3.92 இலட்சம், நேற்று 3.68 இலட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 3 இலட்சத்து 57 ஆயிரத்து 229- பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த சில நாட்களாக கோவிட் பாதிப்பு சீராக குறைந்து வருகின்றது.
கோவிட் தொற்றினால் ஒரே நாளில் 3,449 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 இலட்சத்து 20 ஆயிரத்து 289 ஆக உள்ளது.இந்தியாவில் இதுவரை கோவிட் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2 கோடியே 2 இலட்சத்து 82 ஆயிரத்து 833 ஆக உள்ளது.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இப்படிக்கு உலகம் தொகுப்பு,
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 16 மணி நேரம் முன்
அமெரிக்க தடைகளை மீறி ரஷ்ய எண்ணெய் இறக்குமதி தொடரும் - இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உறுதி News Lankasri