கொழும்பில் கோவிட் தொற்றுக்கு இலக்காகும் நோயாளர் தொடர்பில் வெளியான தகவல்
கொழும்பில் கோவிட் தொற்றுக்கு இலக்காகும் நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.
கொழும்பு மாநகரசபையின் பிரதம மருத்துவ அதிகாரி வைத்தியர் ருவான் விஜேமுனி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த நான்கு நாட்களில் கொழும்பில் கோவிட் மரணங்கள் பதிவாகவில்லை.
கடந்த சில நாட்களாக கோவிட் தொற்று உறுதியான நோயாளர்களின் எண்ணிக்கை சராசரியாக ஐந்து என்ற எண்ணிக்கையில் காணப்படுகின்றது.
நாள் தோறும் 220 பி.சி.ஆர் பரிசோதனைகளும், 300 என்டிஜன் பரிசோதனைகளும் ஆறு நிலையங்களில் நடைபெற்று வருகின்றன.
பி.சி.ஆர் மற்றும் என்டிஜன் பரிசோதனை எண்ணிக்கையில் 1 முதல் 2 வீதமான நோய் தொற்றுக்கு இலக்கான நோயாளர்கள் பதிவாகின்றனர்.
எனினும் பொது மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறினால் மீண்டும் நோய்த் தொற்று தலைதூக்கும் அபாயம் காணப்படுகின்றது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
