வாழைச்சேனையில் மக்கள் மத்தியில் கோவிட் விழிப்பூட்டல் நடவடிக்கை
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி, வாழைச்சேனை பிரதேசத்தில் பகுதியில் இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து தொடர்ந்தும் கோவிட் நோய் தொடர்பான விசேட விழிப்பூட்டல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
கோவிட் வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு மக்கள் நல வேலைத்திட்டங்களை நாடு பூராகவும் முன்னெடுத்து வருகின்றனர்.
அந்தவகையில், கோவிட் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸாரும், இராணுவமும் இணைந்து மக்கள் மத்தியில் இன்று குறித்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜீ.எஸ்.ஜயசுந்தர தலைமையில் இடம்பெற்ற இவ் விழிப்பூட்டும் நடவடிக்கையில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி மற்றும் சித்தாண்டி இராணுவ படைப்பிரிவினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியுள்ளனர்.
இதன்போது நூற்றுக்கணக்கான வாகனங்கள் சோதனை செய்யப்பட்டதுடன், முகக்கவசத்தினை
முறையாக அணியாத பலருக்கு பொலிஸாரினால் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
