உலகை அச்சுறுத்தும் புதிய வைரஸ் திரிபு:110 நாடுகளில் பரவல்
உலகம் முழுவதும் 110 நாடுகளில் கோவிட் வைரஸின் திரிபான B.A 04 மற்றும் B.A 05 தொற்றுக்கு உள்ளான தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
வேகமாக பரவும் தன்மை
இதுவரை உலகத்தில் பரவிய வைரஸ் திரிபை விட மிக பலமான மற்றும் வேகமாக பரவும் தன்மையை கொண்ட இந்த வைரஸ் திரிபு எதிர்காலத்தில் உலக சுகாதாரத்தில் பாரதூரமான நிலைமையை ஏற்படுத்தக் கூடும் என சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
இந்த வைரஸ் திரிபு பரவினால், அதன் மூலம் உலகில் 20 வீதமான நோயாளர்கள் அதிகரிக்கலாம் எனவும் உலக சுகாதார அமைப்பு எதிர்வுகூறியுள்ளது.
மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஆறு உலக சுகாதார பிராந்தியங்களில் இந்த வைரஸ் திரிபு மூன்று பிராந்தியங்களில் பரவியுள்ளதன் காரணமாக ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைப்பு கூறியுள்ளது.