இலங்கையில் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட கோவிட்-19 பரவல்
இலங்கையில் கோவிட்-19 பரவல் முழுமையாகக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளதாகச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பல பகுதிகளிலும் கோவிட்-19 பரவல் கண்டறியப்படுகின்ற போதும் அது கட்டுப்பாட்டை மீறவில்லை என்று சுகாதார சேவைகள் உதவிப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 தொற்று ஒருவரிடம் இருந்து இரண்டு பேருக்குப் பரவுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கொழும்பு மாவட்டத்துக்கு அப்பால் கோவிட்-19 பரவல் உயர்மட்டத்தில் உள்ளதாக பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கம்பஹா, பதுளை, கண்டி,குருநாகல், காலி, களுத்துறை, இரத்தினபுரி, மாத்தறை, மாத்தளை மற்றும் அம்பாறை ஆகிய பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக அதிக கோவிட்-19 பரவல் கண்டறியப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.



