கோவிட் - 19 நோயாளர் வீதம் இரு மடங்காக அதிகரிப்பு! ஆபத்தான சூழ்நிலையை நோக்கி செல்லும் இலங்கை
நாட்டில் கோவிட் - 19 தொற்றுக்கு இலக்கான நோயாளர்களின் வீதம் கடந்த மாதத்தில் பதிவான நோயாளிகளின் வீதத்தை விட இரு மடங்கு அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த விடயத்தை அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
“ஜனவரி மாதத்திற்கு முன்னர் நாட்டில் நடத்தப்பட்ட 100 பி.சி.ஆர் சோதனைகளை தொடர்ந்து கோவிட் - 19 வீதம் 3ஆக பதிவாகியிருந்தது.
எனினும் தற்போது அந்த வீதம் 6ஆக உயர்ந்துள்ளது, இது நாடு ஒரு ஆபத்தான சூழ்நிலையை நோக்கி செல்கிறது என்பதைக் காட்டுவதாக” அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார்.
“கடந்த சில நாட்களில் மேல் மாகாணத்திற்கு வெளியேயும் கோவிட் - 19 தொற்றுக்கு இலக்கானோர் எண்ணிக்கை உயர்ந்த போக்கை காட்டியுள்ளது.
இந்த நிலையில் பெரும்பாலான மாவட்டங்களுக்கு வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் தோல்வி ஏற்பட்டுள்ளது” என்றும் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார்.

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
