தமிழ்ப் பேரினத்தின் மூத்த தலைவர் பழ.நெடுமாறனுக்குக் கோவிட் -19 தொற்று!
தமிழர் தேசிய முன்னணியின் தலைவரும், ஈழத் தமிழர் தீவிர ஆதரவாளருமான பழ.நெடுமாறன் கோவிட் -19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனார்.
அவருக்கு லேசான காய்ச்சல், சளி இருந்ததால் நேற்று நள்ளிரவு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து அவரிடம் மாதிரிகளை பெறப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்குக் கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டது.
தற்போது ராஜீவ்காந்தி அரச வைத்தியசாலையில் பழ.நெடுமாறன் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் நலமுடன் இருக்கின்றார் என்று மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் பழ.நெடுமாறன் உடல் நிலை குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கேட்டறிந்து வருகின்றனர். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "தமிழ்ப் பேரினத்தின் மூத்த தலைவர்களுள் ஒருவரான பெருமதிப்புக்குரிய ஐயா பழ.நெடுமாறன் கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவரும் செய்தி அறிந்தேன்.
ஐயா முழுமையான உடல் நலம் பெற்று மீண்டும் இனமானப் பணிகளைத் தொடர எனது உளப்பூர்வமான விருப்பத்தைத் தெரிவிக்கின்றேன்" - என்று சீமான் பதிவிட்டுளளார்.