இலங்கையில் கோவிட் -19 மரணங்களின் எண்ணிக்கை 403 ஆக உயர்வு!
இலங்கையில் கோவிட் -19 மரணங்களின் எண்ணிக்கை 403 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்றைய தினம் ஆறு கோவிட் -19 மரணங்கள் பற்றிய விபரங்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
1. திவுலன்கடவல பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதான ஆண் ஒருவர் தேசிய தொற்று நோய் விஞ்ஞான பிரிவில் நேற்று உயிரிழந்துள்ளார். கோவிட் -19 நிமோனியாவினால் இவர் உயிரிழந்துள்ளார்.
2. பல்லேதலவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான பெண் ஒருவர், தேசிய தொற்று நோய் விஞ்ஞான பிரிவில் நேற்று உயிரிழந்துள்ளார். கோவிட் -19 நிமோனியா, இரத்தம் விசமாகியமை, சிறுநீரக நோய் போன்ற காரணிகளினால் இவர் உயிரிழந்துள்ளார்.
3. ஹங்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதான ஆண் ஒருவர், தேசிய தொற்று நோய் விஞ்ஞான பிரிவில் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். கோவிட் -19 நிமோனியா மற்றும் புற்று நோயினால் இவர் உயிரிழந்துள்ளார்.
4. நுகேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதான ஆண் ஒருவர் தேசிய தொற்று நோய் விஞ்ஞான பிரிவில் நேற்று உயிரிழந்துள்ளார். கோவிட் -19 நிமோனியா, இரத்தம் விசமாகியதனால் ஏற்பட்ட அதிர்ச்சி, சிறுநீரக நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய் என்பனவற்றினால் இவர் உயிரிழந்துள்ளார்.
5. வத்தள பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதான நபர் ஒருவர் ஹோமகம வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார். கோவிட் -19 நிமோனியா, இரத்தம் விசமாகியதனால் ஏற்பட்ட அதிர்ச்சி, சிறுநீரக நோய், மற்றும் நீரிழிவு என்பனவற்றினால் இவர் உயிரிழந்துள்ளார்.
6. ஹூன்னஸ்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான கண்டி வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார். கோவிட் -19 நிமோனியா, சிறுநீரக நோய் மற்றும் இருதய நோய் என்பனவற்றினால் இவர் உயிரிழந்துள்ளார்.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுக்கு அமைய அரசாங்கத் தகவல் திணைக்களம் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.