நீதிமன்றில் ஏற்பட்ட மர்ம நோயால் உயிரிழந்த கைதி
நீதிமன்ற சிறை கூண்டில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலன்னறுவை விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து ஹிங்குராக்கொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த கொண்டுவரப்பட்ட கைதியே உயிரிழந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் பொலன்னறுவையைச் சேர்ந்த 74 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மின்னேரியா பகுதியில் புத்தர் சிலையைத் திருடிய குற்றச்சாட்டில் குறித்த நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
நீதிமன்றத்தால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட போதிலும், யாரும் அவருக்கு பிணை நிற்க முன்வராததால், அவர் பொலன்னறுவை விளக்கமறியல் சிறைச்சாலையிலேயே இருந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ஹிங்குராக்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.