வெளிநாட்டு பெண்ணுக்கு செய்த மோசடியான செயல்:விமானப்படை வீரர் கைது
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஒரு இலங்கைப் பெண்ணை ஏமாற்றி ஒரு மில்லியன் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த விமானப்படை வீரர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்த பெண்ணை பேஸ்புக் மூலம் உறவு கொண்டு, ஒரு மில்லியன் ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளார்.
மோசடி நடைபெற்ற விதம்
பேஸ்புக் மூலம் அடையாளம் கண்டு, திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து,குறித்த பெண்ணை ஏமாற்றி, ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பணத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.
இலங்கை விமானப்படையின் அம்பாறை விமானப்படைத் தளத்தில் பணியாற்றும் விமானப்படை வீரரே தெல்தெனிய பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் வெளிநாட்டில் இருந்து சமீபத்தில் இலங்கைக்கு வந்த இந்தப் பெண்ணுடன் இலங்கையின் பல்வேறு மாகாணங்களுக்கு பயணம் செய்துள்ளதாகவும் பொலிசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.