மைத்திரியின் முன்னாள் ஊழியர்கள் குழுவின் பிரதானிக்கு வழங்கிய தண்டனையை உறுதிப்படுத்திய உயர் நீதிமன்றம்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊழியர்கள் குழுவின் பிரதானி குசும்தாச மஹாநாம மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பியதாச திஸாநாயக்க ஆகியோருக்கு மூன்று நீதிபதிகளை கொண்ட கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றம் வழங்கிய சிறைத்தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.
54 மில்லியன் ரூபா இலஞ்சம் கோரி 20 மில்லியன் இலஞ்சம் பெற்ற வழக்கு
தமக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனையில் இருந்து தம்மை முற்றாக விடுதலை செய்யுமாறு கோரி இவர்கள் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுக்களின் தீர்ப்பை வழங்கிய உயர் நீதிமன்றம், சிறப்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது.
விஜித் மலால்கொட, எல்.டி.பீ.தெஹிதெனிய, பிரீதி பத்மன் சூரசேன, எஸ். துரைராஜா,யசந்த கோதாகொட ஆகிய நீதியசர்கள் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
2018 ஆம் ஆண்டு மே மாதம் கந்தளாய் சீனி தொழிற்சாலையின் இயந்திரங்களை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய வர்த்தகர் ஒருவரிடம் 54 மில்லியன் ரூபா கையூட்டு கேட்டு, அதில் 20 மில்லியன் ரூபாவை பெற்றுக்கொண்டதாக குற்றம் சுமத்தி, இலஞ்ச ஆணைக்குழு, குசும்தாச மஹாநாம மற்றும் பியதாச திஸாநாயக்க ஆகியோருக்கு எதிராக 24 குற்றச்சாட்டுக்களின் கீழ் கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து குற்றவாளியான குசும்தாசவுக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் 65 லட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.
மற்றைய குற்றவாளியான பியதாச திஸாநாயக்கவுக்கு 12 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனையும் 50 லட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
