வட மாகாண காணிகள் குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை
வட மாகாண காணிகளை அரசுடமையாக்குவது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
வட மாகாணத்தின் 5,941 ஏக்கர் காணிகளை “அரசின் சொத்து” என அறிவிக்கப் போவதாக போவதாக வெளியான 2025 மார்ச் 28 ஆம் திகதியிலான வர்த்தமானி அறிவிப்பு (எண் 2430) மீது, உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்து அதனைச் செயலற்றதாக்கியது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள காணிகள் தொடர்பில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.
2025 ஜூன் 28ற்குள் உரிமையாளர்கள் உரிமை கோரப்படாத காணிகளை அரசுடமையாக்கும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவின் அடிப்படையில் இந்த இடைக்கால தடை உத்தரவினை பிறப்பித்திருந்தது.
நீதியரசர்களான யசந்த கோதாகொட, சம்பத் அபேகோன் மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் இந்த மனுவை பரிசீலனை செய்து வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளனர்.





குக் வித் கோமாளி டைட்டில் ஜெயித்தது இவர்தான்.. மொத்த ஷோவும் ஸ்கிரிப்ட் தானா? ராஜூ விளக்கம் Cineulagam

தப்பிக்கும் போது குணசேகரனிடம் வசமாக சிக்கிய சக்தி, தர்ஷன், பின் நடந்த பரபரப்பு சம்பவம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
