கிராஞ்சி பகுதியில் கடலட்டை பண்ணைக் எதிராக போராட்டம்: நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு
கிராஞ்சியில் கடலட்டை பண்ணைக் எதிராக போராடும் 10 பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராஞ்சி பகுதியில் கடலட்டை பண்ணைக் எதிராக 65வது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீதிமன்ற அழைப்பாணை
இந்த நிலையில், கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றினால் 10 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 10 பேருக்கே இவ்வாறு மன்றினால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.வழக்கு தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இருவர் எவ்வித காரணமுமின்றி பொலிஸாரால்
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தமையும்
குறிப்பிடத்தக்கது.
Bigg Boss: இது உங்க வீடு இல்லை... நீங்க கெஸ்ட் இல்லை! நண்பன் மனைவியிடம் சீறி பாய்ந்த விஜய் சேதுபதி Manithan
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam