இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்: பொது மக்களிடம் உதவிகோரும் பொலிஸார்
தெஹிவளையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கடந்த 9 ஆம் திகதி தெஹிவளையில் ஹோட்டல் உரிமையாளரை சுட்டுக்கொன்ற துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் புகைப்படத்தை பொலிஸ் பிரிவு வெளியிட்டுள்ளது.
தகவல்களுக்கு..
இந்த விசாரணையின் போது சாட்சிகள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் செயற்கை நுண்ணறிவு புகைப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தெஹிவளை பொலிஸ் பிரிவில் கடந்த 9 ஆம் திகதி இந்த கொலை இடம்பெற்ற நிலையில், கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
குறித்த புகைப்படத்தில் உள்ள சந்தேக நபர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், பின்வரும் எண்ணை கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு - 071-8596408 தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா 6 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தார்? வைரலாகும் புகைப்படம் Manithan
சீனாவில் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவிற்கு குறைவு - 3.4 மில்லியன் மக்கள் தொகை சரிவு News Lankasri