மகிந்தானந்த மற்றும் நளின் பெர்னாண்டோ தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்ணான்டோ ஆகியோர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களை மார்ச் 09ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று(20) தீர்மானித்துள்ளது.
தங்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தண்டனைக்கு எதிராக இவர்கள் இருவரும் மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
மார்ச் 09இல் விசாரணை
தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த மேன்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதன்போது, முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த அமர்வு, மேன்முறையீட்டு மனுக்களை மார்ச் 09ஆம் திகதி விசாரணைக்கு அழைக்க உத்தரவிட்டது.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது லங்கா சதொச நிறுவனத்தின் ஊடாக 14 ஆயிரம் கரம்போடுகள் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 50 மில்லியன் ரூபாய்க்கும் மேலாக இழப்பு ஏற்படுத்தியதாக தெரிவித்து மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்ணான்டோ ஆகியோருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது.
விசாரணைகளின் முடிவில் இருவரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட நிலையில், மகிந்தானந்தவுக்கு 20 ஆண்டுகளும், நளின் பெர்ணான்டோவுககு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.