வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்
நாட்டிற்குள் வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் அரசாங்கம் 441 பில்லியன் ரூபாய் வருமானத்தை எதிர்பார்த்த நிலையில் அரசாங்கம் 904 ரூபாய் பில்லியன் வருமானத்தை பெற்றுள்ளதாக நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜெயவீர இன்று (20) நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள்
நாட்டிற்கு சுங்கத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை 90 நாட்களுக்குள் விடுவிக்க 3% வரி சேர்க்கப்படும், மேலும் இது 5 மாத காலத்திற்குள் சுமார் 45% ஆக அதிகரிக்கும்.இதனால் நுகர்வோர் அந்த கூடுதல் தொகையை ஏற்க வேண்டியிருக்கும் என்றும் ரோஹித அபேகுணவர்தன கேள்வி எழுப்பியிருந்தாரர்.
மேலும், இறக்குமதி வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட 3% நிறுத்திவைப்பு வரியை நீக்கி, அதன் நிவாரணத்தை வாகன உரிமையாளர்களுக்கு வழங்குமாறும் கோரியிருந்தார்.

இதற்கு பதிலளித்த பிரதியமைச்சர் நிஷாந்த ஜெயவீர,
வாகனங்களை மீண்டும் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்ட பின்னர், பெப்ரவரி 2025 முதல் (451,770) வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வாகனங்களின் எண்ணிக்கையில் 115,000 கார்கள், 313,999 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 22,407 முச்சக்கர வண்டிகள் அடங்கும்.
நாட்டில் அந்நிய செலாவணியைத் தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரு வழிமுறையாக வாகன இறக்குமதியில் இறக்குமதியாளர்களுக்கு 3% வரி நிறுத்தி வைப்பு நடைமுறைபடுத்தப்படுவதாகவும் பிரதி அமைச்சர் பதிலளித்துள்ளார்.