அர்ஜுன் மகேந்திரனுக்கு நீதிமன்றம் அழைப்பாணை
மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் முதலாவது பிரதிவாதியான முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை பெப்ரவரி 25ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணைகளுக்காக 2025 பெப்ரவரி 25 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு
கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவின் கோரிக்கையை இன்று(26.11.2024) பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில், தாம் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் மத்திய வங்கி மோசடி தொடர்பில் நீதிமன்றினால் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வருவேன் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 2024 ஓகஸ்ட் 18 அன்று பகிரங்கமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
