வெளிநாடொன்றில் தமிழர்கள் இருவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த கமல்நாதம் முனியாண்டி மற்றும் பிரவினாஷ் சந்திரன் ஆகிய இருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1.3 கிலோ போதைப்பொருளை மலேசியாவில் இருந்து கடத்தி வந்த குற்றத்திற்காக இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கடத்தி வரப்பட்ட போதைப்பொருளை வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான சந்துரு சுப்ரமணியம் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த சிங்கப்பூர் உயர்நீதிமன்றம் கமல்நாதம் முனியாண்டி மற்றும் சந்துரு சுப்ரமணியம் ஆகிய 2 பேருக்கும் மரண தண்டனையும், பிரவினாஷ் சந்திரனுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில்,இதற்கு எதிராக சந்தேகநபர்கள் உயர் நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீட்டு மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
