முல்லைத்தீவில் டெங்கு பரவும் அபாயம் : 6 பேருக்கு எதிராக வழக்கு
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான், மாங்குளம் பகுதிகளில் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய வகையில் சூழலை பேணியவர்களுக்கு தலா 3000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுசுட்டான், மாங்குளம் பகுதிகளில் டெங்கு நுளம்பு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் டெங்கு கள உத்தியோகத்தர்கள் இணைந்து விசேட பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த நடவடிக்கையானது, கடந்த 7ஆம் திகதி ஒட்டுசுட்டான் பொது சுகாதார பரிசோதகர் எஸ். டிலக்சன் தலைமையிலும், 8ஆம் திகதி மாங்குளம் பொது சுகாதார பரிசோதகர் எஸ். நதிருசன் தலைமையிலும் இடம்பெற்றுள்ளன.
தண்டப்பணம்
இதன்போது, வீட்டு வளவுகளில் நுளம்பு பெருகும் இடங்கள் சோதனை செய்யப்பட்ட போது, நுளம்பு குடம்பிகள் பெருகும் வகையில் சுற்றுபுறங்களை வைத்திருந்த 6பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, குறித்த 6 பேருக்கு எதிராக நேற்று(12.01.2026) மாங்குளம் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த நீதவான், குற்றவாளிகளை எச்சரித்ததுடன், ஒருவருக்கு தலா 3,000 ரூபா வீதம் தண்டப்பணம் விதித்து, மொத்தமாக 18,000 ரூபா செலுத்துமாறு தீர்ப்பளித்துள்ளார்.
டெங்கு நோய் பரவலைத் தடுக்கும் வகையில், பொதுமக்கள் தங்களது வீட்டு வளவுகளை சுத்தமாக பராமரித்து, நுளம்பு பெருகும் இடங்களை முற்றிலும் அகற்ற வேண்டும் என்றும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.


சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 1 மணி நேரம் முன்
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
ஈரான் விவகாரத்தில் முதல் தாக்குதலைத் தொடங்கிய ட்ரம்ப்... சீனா, இந்தியா உட்பட பல நாடுகள் பாதிப்பு News Lankasri