மேலாடையின்றி உலவிய வெளிநாட்டு பெண்ணுக்கு நீதிமன்றம் தண்டனை
மேலாடையின்றி உலவிய வெளிநாட்டு பெண் ஒருவருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
பொத்துவில் பிரதேசத்தில் மேலாடையின்றி உலவித் திரிந்த தாய்லாந்து பெண்ணுக்கு நீதிமன்றம் ஆறு வாரங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
பொத்துவில் நீதிமன்றினால் குறித்த பெண்ணுக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஒத்தி வைப்பு
குறித்த பெண்ணுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நீதிமன்றம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
26 வயதான குறித்த தாய்லாந்து யுவதி நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரதான வீதியில் அநாகரீகமாக நடந்து கொண்டமை, பொதுமக்களுக்கு இடையு_று ஏற்படும் வகையில் செயற்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்களுக்காக நீதிமன்றம் தனித்தனியாக தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
காதலனுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பெண் இவ்வாறு நடந்து கொண்டதாக காவல்துறை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
