போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

Supreme Court of Sri Lanka
By Kamal May 20, 2026 12:15 AM GMT
Report

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவிற்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிரேஸ்ட அதிகாரி ஒருவரின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளார் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட பதவியில் சிரேஸ்ட இலங்கை நிர்வாக சேவை (SLAS) அதிகாரி ஒருவர் கடமைகளைப் பொறுப்பேற்பதைத் தடுத்ததன் மூலம், குறித்த அதிகாரியின் அடிப்படை உரிமை மீறப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டிலிருக்கும் இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு பணம் - புதிய திட்டம்

வெளிநாட்டிலிருக்கும் இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு பணம் - புதிய திட்டம்

அரச சேவை

இந்தத் தீர்ப்பில், அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தன்னிச்சையாகச் செயல்பட்டுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு | Court Rules Against Transport Ministry Secretary

அரச சேவை ஆணைக்குழுவிற்கு (PSC) வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களில் தலையிட்டுள்ளார் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் மூலம், மனுதாரரின் அரசியலமைப்பின் 12(1) பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சுமார் 30 வருட கால சேவை அனுபவத்தைக் கொண்ட விசேட தர SLAS அதிகாரியான டபிள்யூ.எஸ். சத்யானந்த என்பவரே இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் சத்யானந்த போக்குவரத்து அமைச்சின் மேலதிக செயலாளராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டார்.

அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்பதற்காகச் சென்றபோது, அந்தப் பதவிக்கு ஏற்கனவே வேறொரு அதிகாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளரிடமிருந்து அவருக்கு செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

மனுவில் குறிப்பிட்டுள்ளபடி, சத்யானந்தா மீண்டும் அமைச்சிற்குச் சென்றபோது, அவரது சேவைகள் தேவைப்படவில்லை எனக் கூறி அவரை வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு அதிகாரிகளின் நியமனங்கள்

இதன் காரணமாக அவர் தற்காலிகமாக பொது நிர்வாக அமைச்சின் "அதிகாரிகள் குழுவிற்கு" (Officers Pool) திரும்ப வேண்டியிருந்ததுடன், பின்னரே அவருக்கு வேறொரு நியமனம் வழங்கப்பட்டது.

போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு | Court Rules Against Transport Ministry Secretary

அரசு அதிகாரிகளின் நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் என்பன அரச சேவை ஆணைக்குழுவின் (PSC) அரசியலமைப்பு அதிகாரங்களுக்கு உட்பட்டவையே தவிர, அமைச்சின் செயலாளர்களின் அதிகார வரம்பிற்குள் வருபவை அல்ல என நீதியரசர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த அதிகாரங்களில் தலையிட அல்லது அவற்றை தமதாக்கிக் கொள்ள முயலும் எந்தவொரு முயற்சியும் சட்டத்தின் ஆட்சியையும் பொதுமக்களின் நம்பிக்கையையும் சீர்குலைக்கும் என்று நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

செயலாளரின் இந்த நடவடிக்கை நிர்வாக நடைமுறையை மட்டுமன்றி, ஒரு பொது அதிகாரி என்ற ரீதியில் மனுதாரரின் கண்ணியத்தையும் பாதித்துள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.

இந்த வழக்கில் மனுதாரருக்கு இழப்பீடு அல்லது வழக்குச் செலவுகளை வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. எனினும், அதற்கான காரணமாக நீதிமன்றம் குறிப்பிட்ட விடயம் மிக முக்கியமானது.

மனுதாரர் எதிர்கொண்ட கண்ணிய இழப்பு, சங்கடம் மற்றும் அவமதிப்பு ஆகியவற்றை எந்தவொரு பணத்தினாலும் ஈடுசெய்துவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் நெகிழ்ச்சியுடன் சுட்டிக்காட்டியுள்ளது. 

இலங்கைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கும்பல் தொடர்பில் அம்பலம்! விமான நிலையத்தை சுற்றிவளைத்த பொலிஸார்

இலங்கைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கும்பல் தொடர்பில் அம்பலம்! விமான நிலையத்தை சுற்றிவளைத்த பொலிஸார்

ஐரோப்பாவில் இருந்து இலங்கை வரும் சீனி - விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

ஐரோப்பாவில் இருந்து இலங்கை வரும் சீனி - விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US