பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் பொல்துவ சந்தியில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடத்தும் ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்தும் உத்தரவை பிறப்பிக்குமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றத்திற்கு செல்ல தடையேற்படும் எனவும் இதன் மூலம் அவர்களின் சிறப்புரிமை மீறப்படும் என்பதால், ஆர்ப்பாட்டத்தை தடை செய்து உத்தரவை பிறப்பிக்குமாறு பொலிஸார், நீதிமன்றத்தில் இந்த கோரிக்கை விடுத்திருந்தனர்.
பொலிஸார் முன்வைத்த வாதங்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் ஹர்சன கெக்குணுவல பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
அத்துடன் சம்பந்தப்பட்ட இடத்தில் அமைதியை சீர்குலைக்கும் சம்பவங்கள் நடந்தால், அதற்கு எதிராக பொலிஸ் அதிகாரத்திற்கு அமைய நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் நீதவான் கூறியுள்ளார்.
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan