பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தில் ஏற்பட்ட பதற்றம்: மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் (Video)
ஜனாதிபதி கோட்டாபயவை பதவி விலக கோரி அனைத்து பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் தற்போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பொலிஸாரினால் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
முதலாம் இணைப்பு
கொழும்பில் தாமரைத்தடாகம் முன்பாக தற்போது பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்ட பேரணியொன்றை ஆரம்பித்துள்ளனர்.
இவேளை குறித்த பேரணியானது பொல்துவ சந்தியிலுள்ள நாடாளுமன்ற நுழைவுப் பகுதிக்கு வரலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன் அங்கு வீதித் தடைகளும் பெருமளவு குவிக்கப்பட்டுள்ளதுடன், தண்ணீர் தாரை பிரயோக வண்டிகளும் தயார்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, ஜனாதிபதி மாளிகை பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்கலைக்கழக மாணவர்களின் இந்த ஆர்ப்பாட்ட பேரணியானது எங்கு செல்லவுள்ளது என்பது தொடர்பான தகவல்கள் தெரியாத இந்த சூழ்நிலையிலேயே கொழும்பின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.











6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 55 நிமிடங்கள் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
