சட்டவிரோதமாக கடற்தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு நீதிமன்றம் பிறபித்துள்ள உத்தரவு
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்தொழிலில் ஈடுபட்ட 14 கடற்தொழிலாளர்கள் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டதோடு 14 வயது சிறுவனை சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகளிடம் நேற்று (07.11.2022) ஒப்படைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 5ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 15 இந்திய கடற்தொழிலாளர்களையும் 2 படகையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்கள் இருவருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் தலைமன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விசாரணைகள்
எனவே கைது செய்யப்பட்ட 13 இந்திய கடற்தொழிலாளர்கள் கடற்படையினரின் விசாரணைகளின் பின் நேற்றுமுன் தினம் (06.11.2022) மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் குறித்த கடற்தொழிலாளர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சிகிச்சை பெற்றுவந்த 2 கடற்தொழிலாளர்கள்
இந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த 2 கடற்தொழிலாளர்களும் வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய நிலையில் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம்
ஒப்படைக்கப்பட்டனர்.
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் 15 இந்திய கடற்தொழிலாளர்களையும் நேற்று (07.11.2022) மன்னார் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




