போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இருவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
யாழில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இருவருக்கும் தலா பத்தாயிரம் ரூபா தண்டத்தினை விதித்து ஊர்காவற்துறை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புளியங்கூடல் வடக்கு பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் 2400 மில்லிக்கிராம் கஞ்சாவுடனும், வேலணை - வங்களாவடி, 1ம் வட்டாரத்தை சேர்ந்த 40 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் 2000 மில்லி கிராம் கஞ்சாவுடனும், நேற்று (02) காலை கைது செய்யப்பட்டனர்.
ஊர்காவற்துறை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், ஊர்காவற்துறை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து இக்கைது நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் நேற்றைய தினமே ஊர்காவற்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது அவர்கள் இருவருக்கும் தலா பத்தாயிரம் ரூபா தண்டத்தினை விதித்து ஊர்காவற்துறை
நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.





ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
