கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
கிளிநொச்சி - இரணைதீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களுக்கும் எதிர்வரும் 25 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
எல்லை தாண்டிய நிலையில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 12இந்திய மீனவர்களையும் அவர்களின் இரண்டு படகுகளையும் நேற்றிரவு கடற்படையினர் கைது செய்திருந்தனர்.
குறித்த 12மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் சட்ட நடவடிக்கைக்காகக் கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்த நிலையில் இன்று பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ். சிவபாலசுப்பிரணியம் முன்னிலையில் முற்படுத்தியபோதே அவர் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த மீனவர்களின் விபரங்களை யாழ் இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள் பெற்று அவர்களுக்குத் தேவையான, உணவு, உடை என்பவற்றை வழங்கியிருந்தனர்.
இவர்கள் அனைவரும் இராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam