ராஜித சேனாரத்னவை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு
கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வு திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு ஒப்படைத்து அரசாங்கத்திற்கு 2.63 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக நஷ்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனுவெல உத்தரவிட்டுள்ளார்
இந்த வழக்கு இன்று(11) கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனுவெல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கைகள்
இதன்போது, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கைகளை கருத்தில் கொண்ட நீதிவான், ராஜித சேனாரத்னவை கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 5 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri