கோட்டாபயவிடம் வாக்குமூலம் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் போது 2022 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் கைப்பற்றிய பணம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெறுமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் போராட்டகாரர்கள் கைப்பற்றிய பணம்

ஜனாதிபதி மாளிகையில் போராட்டகாரர்கள் கைப்பற்றிய நிலையில், பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு கோடியே 70 லட்சம் ரூபா தொடர்பாகவே கோட்டாபய ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம், பொலிஸ் விசேட குற்ற விசாரணைப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகையில் இருந்த அந்த பணத்தை கைப்பற்றிய போராட்டகாரர்கள் அன்றைய தினமே அதனை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இதன் பின்னர், ஜனாதிபதி மாளிகையில் கிடைத்த பணம் தொடர்பில் பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri