வவுனியாவை அதிரவைத்த இரட்டை கொலை! சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு (Video)
வவுனியா - தோணிக்கல் பகுதியில் வீடு புகுந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் தம்பதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறும், மீண்டும் 11ஆம் திகதி ஆள் அடையாள அணி வகுப்பிற்காக 2ஆம் 3ஆம் 4ஆம் 5ஆம் சாட்சிகளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் எனவும் நீதிபதியால் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்போது, மன்றில் 4ஆம் சாட்சி தனது கருத்தினை தெரிவிக்க முற்பட்ட போது நீதிபதி 02.08.2023 உங்கள் கருத்தை தெரிவித்தால் உங்களுக்கு அனுகூலம் ஏற்படுத்த சந்தர்ப்பமாக அமையும் அதனால் 11ஆம் திகதி நீங்கள் விரும்பினால் யோசித்து உங்கள் கருத்தை தெரிவிக்கலாம் என வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் அகமட் ரசீம் தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரணை
இந்நிலையில் தாக்குதலுக்காக பயன்படுத்தப்பட்ட வாள்கள் மற்றும் கோடரி, கத்தி, இரும்புகம்பி என்பன நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகிந்த குணரத்ன, பிரதி பொலிஸ் மா அதிபர் பி.அம்பாவில ஆகியோரின் அறிவுறுத்தல்கள் மற்றும் மேற்பார்வையின் கீழ் வவுனியா குற்றப் புலனாய்வுப் பிரிவினர், வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் உள்ளிட்ட பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் நேற்று (02.08.2023) வவுனியா சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்திய பின்னர், வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில், குற்ற புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை விசாரணை பிரிவினர் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு
இதன்போதே சந்தேகநபர்களை எதிர்வரும் 11ஆம் திகதி வரை அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அத்துடன், சந்தேகநபர்கள் சிறு நோய்களுக்கு உட்பட்டவர்கள் என்பதனால் சிறைச்சலை வைத்திய அதிகாரியிடம் சிகிச்சை பெற்றுக் கொடுக்க பணிக்கப்பட்டுள்ளது.
நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் குற்ற புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை விசாரணை பிரிவினரான பொலிஸ் பரிசோதகர் இக்பால், பொலிஸ் பரிசோதகர் பொல்வத்த, பொலிஸ் சார்ஜன்ட் சங்கர்ரூவான், பொலிஸ் காண்ஸ்டபிள் விஜரட்ண மதுசங்க பண்டார ஆகியோர் இணைந்து அனுராதபுரம் சிறைச்சாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |