எயார்பஸ் மோசடி விசாரணை! நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
எயார்பஸ் கொடுக்கல் - வாங்கல் முறைகேடு தொடர்பான விசாரணைகளில், நீதிமன்ற உத்தரவுகளை மீறி முன்னிலையாகாத குற்றச்சாட்டின் கீழ், ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி மறைந்த கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவின் பிணைப் பணத்தை அரசுடைமையாக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் 2ஆம் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள பிரியங்கா நியோமாலி, நீதிமன்ற விசாரணைகளுக்குத் தொடர்ந்து சமூகமளிக்காமல் தவிர்த்து வந்தமையினால், அவருக்கு எதிராக ஏற்கனவே பகிரங்க பிடியாணை (Open Warrant) பிறப்பிக்கப்பட்டிருந்தது.
பகிரங்க பிடியாணை
பிரியங்கா நியோமாலி சார்பில் நீதிமன்றத்தில் பிணை நின்றிருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி ஆகியோர், தங்களை பிணைப் பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதற்கமைய, பிணையாளர்களை அவர்களின் பொறுப்பில் இருந்து விடுவித்த நீதிமன்றம், சந்தேகநபரான பிரியங்கா நியோமாலி வைப்புச் செய்திருந்த பிணைப் பணத்தை முழுமையாக அரசுடைமையாக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் ஒப்பந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரியங்கா நியோமாலி, நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தப்பிச் சென்றதை அடுத்து, முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி ஆகியோர் பிணைநின்ற 40 மில்லியன் ரூபா பிணைத்தொகையைப் பறிமுதல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் விமானங்களை வாங்கியதில் நடந்ததாகக் கூறப்படும் பெரிய அளவிலான நிதி முறைகேடுகள் தொடர்பான வழக்கு இன்று (30) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கின் இரண்டாவது சந்தேக நபரான, விமான நிறுவனத்தின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விக்ரமசிங்க, தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தப்பிச் சென்று, தலைமறைவாக இருக்கின்றார்.
திறந்த பிடியாணை
சந்தேக நபருக்கு முன்னாள் மூத்த கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி ஆகியோர் பிணை வழங்கியிருந்தனர்.
இந்நிலையில் இன்றைய தினம் குறித்த வழக்கு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்போது அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவியின் பிணைத் தொகையை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அரவிந்த மற்றும் அவரது மனைவி ஆகியோர் தலா 20 மில்லியன் ரூபா வீதம். 40 மில்லியன் ரூபாவுக்கு பிணை நின்றிருந்தனர்.
குறித்த முழுத் தொகையையும் பறிமுதல் செய்ய நீதவான் இன்று உத்தரவிட்டார்.

எனினும் பிணையாளிகளுக்காக முன்னிலையான சட்டத்தரணிகள், இன்று 20 மில்லியன் ரூபாய் செலுத்தத் தயாராக இருப்பதாகவும், மீதமுள்ள தொகையைச் செலுத்துவதற்கு நிவாரணம் வழங்குமாறும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த நீதவான், இன்று 20 மில்லியன் ரூபாயை நீதிமன்றத்தில் ஒப்படைக்க அனுமதி வழங்கினார்.
மீதமுள்ள 20 மில்லியன் ரூபாயை ஒக்டோபர் 14-ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கில் முதல் சந்தேக நபரான, முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன, பிணையில் இருந்தபோது முன்னதாகத் தற்கொலை செய்துகொண்டார்.
இரண்டாவது சந்தேக நபர், தனது கணவரின் மரணத்தைத் தொடர்ந்து உயிருக்கு அஞ்சியதால் நாட்டிற்கு வருவதைத் தவிர்த்து வருவதாகவும், தற்போது அவர் தன் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் பிணையாளிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இருப்பினும், இரண்டாவது சந்தேக நபர் நீதிமன்றத்தைத் தவிர்த்து வருவதாலும், முதல் சந்தேக நபரின் மரணத்திற்கு முன்பிருந்தே வெளிநாட்டில் இருப்பதாலும், பிணையாளிகளுக்கு வேறு எந்த விசேட நிவாரணமும் வழங்க முடியாது என்று நீதிபதி சுட்டிக்காட்டினார்.
அத்துடன் நீதிமன்றத்திற்கு வராமல் தலைமறைவாக இருக்கும் பிரியங்கா நியோமாலி விக்ரமசிங்கவைக் கைது செய்ய ஏற்கனவே ஒரு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, அது இன்டர்போலுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
அடுத்த 2 அல்லது 3 மாதங்களுக்குள் ராஜபக்ச குடும்பத்தின் ஐவருக்கு ஏற்படப்போகும் நிலை - வெளிவந்துள்ள தகவல்
மேலதிக தகவல்- அனதி