கொழும்பில் பெருந்தொகை பணத்தை மோசடி செய்த திலினி பிரியமாலி! நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
கொழும்பில் நிதி நிறுவனமொன்றில் பல கோடி ரூபா பணம் மோசடி செய்த நிதிக்குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, திலினியின் நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொரளை சிறிசுமண தேரர் மற்றும் இசுரு பண்டார ஆகியோரை பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவு
இதற்கமைய, திலினி பிரியமாலி மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டையில் உள்ள உலக வர்த்தக நிலையத்தின் 34வது மாடியில் திட்ட முதலீட்டிற்காக குறித்த பெண் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த நிலையில்,அரசாங்கத்தின்பல்வேறு மட்டங்களில் உள்ளவர்களிடம் இருந்து பல கோடி ரூபாவிற்கும் அதிகமாக நிதி மோசடி செய்தமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற துறைப்பாட்டிற்கமைய அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், திலினி பிரியமாலி, டுபாயில் ஆரம்பித்துள்ள வியாபாரம் ஒன்று தொடர்பில் விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த வியாபார நடவடிக்கை திலினி பிரியமாலி பெயரிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சி.ஐ.டி.யினர் மன்றுக்கு அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த வியாபாரம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக சர்வதேச பொலிஸ் (இன்டர்போல்) மற்றும் மத்திய வங்கியின் உதவியினை நாடியுள்ளதாக சி.ஐ.டி. அதிகாரிகள் நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சந்தேகநபர்களுக்கு எதிராக தனியான சார்ட்சி சுருக்கத்தை விசாரணையாளர்கள் மன்றில் முன்வைத்த நிலையில் விடயங்களை ஆராய்ந்த நீதிவான் இது தொடர்பிலான வழக்கு விசாரணையை எதிர்வரும் டிசம்பர் 13 வரை ஒத்திவைத்துள்ளார்.

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
