மன்னாரில் பொலிஸாரை தாக்கிய சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
மன்னார் உயிலங்குளம் பகுதியில் விசாரணைக்காக சென்ற பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேகநபர்களுக்கு எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மன்னார் மாவட்ட பதில் நீதவான் நேற்றையதினம்(01.07.2023) வழங்கியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை (24.06.2023) மாலை லை மன்னார் உயிலங்குளம் மதுபானசாலைக்கு அருகில் சிலர் கலவரத்தில் ஈடுபடுவதாக பொதுமக்கள் சிலர் உயிலங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கி உள்ளனர்.
இதைத் தொடர்ந்து உயிலங்குளம் பொலிஸார் சம்பவம் நடைபெற்ற இடத்துக்குச் சென்று விசாரணை செய்ததுடன் கலவரத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்தவர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.
பலத்த காயங்கள்
இதற்கமைய பொலிசார் சந்தேக நபர்களை விசாரணை செய்வதற்கு அவர்களின் வீட்டை நோக்கிச் சென்றிருந்தபோது பொலிசார் மீது அவ்வீட்டிலிருந்தவர்கள் சரமாரியாக தாக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தாக்குதலை மேற்கொண்டவர்களில் 5 ஆண்களும் 5 பெண்களும் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது. இதனால் பொலிஸார் காயங்களுக்கு உள்ளாகி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த 10 சந்தேக நபர்களை நேற்று(30.06.2023) மன்னார் மாவட்ட பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போது குறித்த 10 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |