மட்டக்களப்பில் தந்தையால் மகள்களுக்கு நேர்ந்த கொடூரம்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
மட்டக்களப்பில் தனது 7 மற்றும் 8 வயது மகள்களை தகாத முறைக்கு உட்படுத்திய தந்தைக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனையும், 40 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் இரண்டு இலட்சம் ரூபா இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் கடந்த 12ஆம் திகதி இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.
தந்தை கைது
56 வயதுடைய தந்தையொருவர் உளநலம் பாதிக்கப்பட்ட மகள் உட்பட தனது இரு மகள்களிடம் கடந்த 2016ஆம் ஆண்டு தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டதையடுத்து அவருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் 4 குற்றச்சாட்டுகளின் கீழ் பொலிஸார் வழக்கு பதிவு செய்து சிறைச்சாலையில் அடைத்த நிலையில் அவர் பிணையில் வெளிவந்துள்ளார்.
குற்றவாளியாக அடையாளம்
இதனை தொடர்ந்து வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்துள்ளது.
இதனை தொடர்ந்து சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டமை குறித்த 4 குற்றச்சாட்டுகள் தொடர்பாக சாட்சியங்கள், சான்று பொருட்கள் மற்றும் சட்ட வைத்தியர் அறிக்கை மூலம் குற்றவாளியாக கடந்த செப்டெம்பர் 27ம் திகதி அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



